ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை-அமைச்சர் ஜெயக்குமார்

 அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


சசிகலா இல்லாமல் அதிமுக ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.


சசிகலா சிறையில் இருந்து வெளியே வர உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


செல்லூர் ராஜூ மனைவிக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கொரேனாவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அமைச்சர் செல்லூர் ராஜூவின் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.


 


சென்னை தலைமைச் செயலகம் நாளையும், நாளை மறுநாளும் மூடப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுவதால் 2 நாட்களுக்கு தலைமைச் செயலகம் மூடப்பட உள்ளது.