சென்னை உயர்நீதிமன்றம்! அறிவிப்பு

 திங்கள் முதல் அனைத்து வழக்குகளும் விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம்!


ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில், ஜுலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது எனவும், காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.


இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6 ஆம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர். இதேபோல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு நீதிபதிகளை கொண்ட இரண்டு அமர்வும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம் தமிழக மீனவர்கள் 16 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா பாதிப்பு!


சென்னையில் இறப்பு விகிதம் 1.52 % லிருந்து 1.55 % ஆக உயர்வு!


சென்னையில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62% ஆக உயர்வு!


கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை : வைகோ