குறுஞ்செய்திகள்


ஓராண்டை நிறைவு செய்த சந்திரயான்-2:


நிலவை ஆராய இந்தியா அனுப்பிய சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு ஓராண்டை நிறைவு செய்துள்ளது. அமெரிக்க அரசு உத்தரவு:


ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபட்டதால் 72 மணி நேரத்தில் மூட உத்தரவிட்டுள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.ஏர் இந்தியா ஒப்புதல்:


ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு ஊதியமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பும் திட்டத்திற்கு ஏர் இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது.ஒலிம்பிக் போட்டி தள்ளிவைப்பு:


ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


 உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு உத்தரவு:


சர்வதேச தரத்தில் இயங்காததால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கு மேலும் 6 மாத கால தடையை நீட்டித்து உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.