தமிழகம் முழுவதும் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 10 நாட்களில் கொரோனாவை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கிருஷ்ணகிரியில் ஆய்வு பணியில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த திரையுலகினருக்கு பல்வேறு பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பாரதி ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் கட்சியின் தமிழ்நாடு கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில் மாநில செயலாளராக தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் பெப்சி சிவா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ் பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டள்ளார். இயக்குனர் பேரரசு, இசை அமைப்பாளர் தீனா ஆகியோர் கலாச்சார பிரவு மாநில செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் ராதா ரவி, நடிகர் விஜய்குமார், கங்கை அமரன், கஸ்தூரி ராஜா ஆகியோர் மாநில செயற்குழு உறுப்பினராகி உள்ளனர். ஒரே நேரத்தில் இத்தனை சினிமா பிரபலங்கள் கட்சி பதவி பெற்றிருப்பது இதுவே முதல் முறை