கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய ஆதாரம் சிக்கியுள்ளதாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது. தங்கம் கொடுத்தவர்களுக்கு பணம் அனுப்பிய ஹவாலா கும்பல் சிக்கியது. ஹைதராபாத்தில் சிக்கிய ஹவாலா கும்பலிடம் விசாரணை நடத்துவதாக என்ஐஏ தகவல் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ-யின் நான்கரை மணி நேர விசாரணை நிறைவு பெற்றுள்ளது. காவல் நிலையத்தில் காவலர் பியூலா உள்பட 3 காவலர்களிடம் விசாரணை நடந்தது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வீட்டில் சிபிஐ 2 மணி நேரம் விசாரணை நடத்தியது.
பிரதமர் மோடி பற்றி சமுகவலைதளத்தில் அவதூறு பரப்பியவரை அன்னூர் போலீஸ் கைது செய்தது. அன்னூர் காவல்நிலையத்தில் அளிக்கப்பட புகாரின் பேரில் சண்முகநாதன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.