திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் சிக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜலால், முகமது ஷபி, ஹம்ஜத் ஆகியோர் கொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 பேரும் கடத்தல் தங்கத்தை வியாபாரிகளுக்கு கொடுத்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்
மதுரையில் நடைமுறையில் இருந்த தீவிர ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை முதல் வழக்கமான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.