இன்றைய ராசிபலன் 25/07/2020

 


 மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.


ரிஷபம்: நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உறவினர்களின் மூலம் வீண்செலவுகள் ஏற்படலாம். தாயாரின் உடல் நலத்தில் அக்கறையுடன் இருப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். அலுவலகத்தில் அதிகக் கவனம் தேவை.


மிதுனம்:இன்று கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான எண்ணம் ஏற்படும்.


கடகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். வாகனத்தை சீர்செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். எண்ணம் நிறைவேறும் நாள்.


சிம்மம் :இன்று எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பயணம்  செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.


கன்னி: வருமானத்தை உயர்த்தப் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களின் மூலம் நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உள்ள வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.


துலாம்: தந்தையின் உடல்நலம் மேம்படும். பெண்கள் ஆடம்பரச் செலவு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொள்வர். நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரிகளுக்கு அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


விருச்சிகம்:இன்று சில முக்கியமான காரியங்களை கூடுதலாக கவனம் செலுத்துவதன் மூலமும் அதிக உழைப்பினாலும் செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். செவ்வாய் தனது சஞ்சாரத்தின் மூலம் தைரியமாக எதையும் செய்ய தூண்டுவார். 


தனுசு: இன்று உங்களது செயல்களால் உங்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும்எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்: இன்று எதை பற்றியும் கவலைப்படாமல் தொழில், வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசாங்கம் மூலமாக நடக்க வேண்டிய காரியங்களும் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கலின்றி எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும்.


கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனம் தெரியாத சின்ன, சின்னகவலைகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தம் அடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


மீனம்: மனதில் இனம் புரியாத பயம் வந்துப் போகும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். தாயார் ஆதரித்து பேசுவார். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.


மோகனா  செல்வராஜ்