மேஷம்: சமூகத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.வெளியூரில் இருக்கும் உறவினர் மூலம் எதிர்பார்த்த ஆதாயத்தை பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு புத்திசாலித்தனம் காரணமாகப் பாராட்டுக் கிடைக்கும். அவசரப் போக்கு வேண்டாம்.கனவுகள் நனவாகும் நாள்.
ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். எதிர்பாராத செலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.
மிதுனம் : வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் சாதுர்யமாக பேசி லாபத்தை அதிகப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் உள்ள நிலுவைப் பணிகளை முடிப்பதற்கு மேலதிகாரி ஆதரவாக இருப்பார். பிள்ளைகளால் பெருமிதம் அடைவீர்கள். சுபச் செலவுகள் கூடும்.
கடகம்: கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டிவரும்.சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். உறவினரிடமிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் பணத்தின் அருமையை உணர்ந்து சேமிப்பை அதிகப்படுத்துவர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
கன்னி: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
துலாம் : எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வீடு வாங்குவது சம்பந்தமான முயற்சிகளில் உதவி கிடைக்கும். வியாபாரிகள் எடுத்த செயல்களை செய்து முடிப்பதில் சிறிய அளவில் தாமதம் ஏற்படும். உங்களின் திறமைகள் வெளிப்படும்பெண்களுக்கு பணபுழக்கம் எதிர்பார்த்ததை விட அதிகரிக்கும்.
விருச்சிகம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கணவன், மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மறையும்.உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழிலில் லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய மாற்றங்கள் ஏற்படும் நாள்.
மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிக்கப்பாருங்கள்தாயாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு பின் சரியாகும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. எடுத்த முயற்சிகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். அக்கம் பக்கத்தினருடன் கருத்து வேறுபாடு ஏற்படாதபடி பேசுவது நல்லது.
கும்பம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் புதிதாக வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.புதுவீடு மாறும் சூழல் ஏற்படலாம்.
மோகனா செல்வராஜ்