குரு பெயர்ச்சி 2020 கணிப்புகள் நேற்றைய தொடார்ச்சி

குரு பெயர்ச்சி 2020 கணிப்புகள் நேற்றைய     தொடார்ச்சி 

மகரம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு வக்ரகதியில் வந்த குருபகவான் - யாருக்கு நன்மை


குருபகவான் சுப கிரகம். இதுநாள் வரை மகரம் ராசியில் சனியோடு இணைந்திருந்த குரு பகவான் படிப்படியாக விலகி வக்ரகதியில் சஞ்சரித்து தனுசு ராசிக்கு  ஜூலை 8  முதல் இடப் பெயர்ச்சியடைகிறார்.


நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.


துலாம்:


குருஉங்கள் மூன்றாவது மற்றும் ஆறாவது வீட்டின் உரிமையாளர். இது இந்த ஆண்டு மூன்றாவது வீட்டில் வைக்கப்படும்


இந்த குரு பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களால் செலவுகளால் வரும். அரசு வழி விவகாரங்களில் பிரச்சினை வரலாம் அலட்சியமாக இருக்காதீர்கள். ஜூலை 31 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்களுக்கு அற்புதமான காலகட்டம். உங்களுக்கு வருமானம் வரும். உங்களின் எண்ணங்கள் நிறைவேறும் உங்களின் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் எனவே இந்த ஒருமாதம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்க. வியாழக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு.

விருச்சிகம்


குரு என்பது கிரகம் ஆளும் உங்கள் இரண்டு வீடுகளை, அதாவது 2 மற்றும் 5 வது வீடாகும். தற்போதைய 2020 ஆம் ஆண்டில், இது 2020 ஆம் ஆண்டில் உங்கள் இரண்டாவது வீட்டில் இடம் பெறும்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கும். உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும் என்றாலும் சுறுசுறுப்பாக உற்சாகமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். ஜூலை மாதத்திற்கு மேல் உங்களின் சமயோஜித புத்தி அதிகமாகும். புதிய வேலை கிடைக்கும், மனைவி வழி உறவினர்களின் ஆதரவும் மனைவி வழியில் சொத்துக்களும் கிடைக்கும். செவ்வாய்கிழமை விளக்கேற்றி குங்குமம் அர்ச்சனை பண்ணுங்க.


தனுசு:


குருஉங்கள் முதல் மற்றும் நான்காவது வீட்டின் அதிபதி, மேலும் 2020ஆண்டில் முதல் வீட்டிலேயே அது மாறும்.


தனுசு ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் குரு உங்க ஜென்ம ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். இதுநாள் வரைக்கும் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் தீரும். உங்களின் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். புதிய பதவிகள் தேடி வரும். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 10 வரைக்கும் உங்க ஜென்ம ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிரமாக செல்லும் காலத்தில் கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். விட்டுக்கொடுத்து போங்க. வியாழக்கிழமை மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து சர்க்கரைப்பொங்கல் சமைத்து வீட்டில் வழிபடுங்க.


மகரம் :


வியாழன், குரு என்றும் புகழப்படுகிறது, உங்கள் மூன்றாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது, மேலும் 2020ஆண்டில் உங்கள் பன்னிரண்டாவது வீட்டில் குரு பெயர்ச்சி உருவாக்கும்.


மகரம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் விரைய ராசியில் சஞ்சரிக்கிறார். புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்க. கடன் பிரச்சினைகள் உங்களுக்கு தொல்லையை கொடுக்கலாம். எச்சரிக்கையாக இருங்க. எடுத்த காரியத்தை முடிக்க போராட வேண்டியிருக்கும். வேலையில் கவனமாக இருங்க. கர்ப்பிணி பெண்கள் கவனம் தேவை. மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை சாப்பிடாதீங்க. கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

கும்பம்:


குரு அவர்களின் இரண்டாவது மற்றும் பதினொன்றாவது வீட்டை ஆளுகிறது. 2020 ஆம் ஆண்டில், இது பதினொன்றாவது வீட்டில் வைக்கப்படும்.


கும்பம் ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் உள்ள குரு உங்களுக்கு லாபத்தை கொடுப்பார். உறவினர்கள் மூலம் மறைமுக நெருக்கடிகள் வரும். பண நெருக்கடி வந்து நீங்கும். வீண் செலவுகளை தவிர்த்து விடுங்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். குரு தட்சிணாமூர்த்தியை நினைத்து விரதம் இருங்க தடைகள் நீங்கும்.

மீனம் :


பூர்வீக முதல் மற்றும் பத்தாவது வீடு குருவால் நிர்வகிக்கப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில், இது உங்கள் பத்தாவது வீட்டில் குரு பெயர்ச்சி உருவாக்கும்.


மீனம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசிநாதன் குரு பத்தாம் வீட்டில் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த கடன்களை திருப்பி கொடுப்பீர்கள். தொலைந்து போன பணம், நகை ஆவணங்கள் திரும்ப கிடைக்கும். தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் நலமாக இருக்கும்.


பிருகஸ்பதி என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார்.  இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு. இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்களையும் செய்து தேவர்களின் குருவாக மாறினார். அத்துடன் திட்டையில் கோயில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரைக் வணங்கி நவக்கிரக அந்தஸ்து பெற்றார். அதனால் பிருகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது. 


இவர் இடம் பெயர்வதே குருப் பெயர்ச்சி என்று வழங்கப்படுகிறது. இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிருகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன்,வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.


இது சோதிடத்தின் படி இவரின் சொந்த வீடுகள் தனுசு மற்றும் மீனம் ஆகிய இராசிகள் ஆகும். இவர் ஒளி படைத்த ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவராவார்.


ஆட்சி - தனுசு, மீனம்


நட்பு   -  மேஷம், சிம்மம், கன்னி, விருச்சிகம்


உச்சம்  - கடகம்


பகை - ரிஷபம், மிதுனம், துலாம்


நீச்சம் - மகரம்


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவின் நட்சத்திரகங்கள்.


இரண்டு வகைப்படும். அவை தேவ குரு மற்றும் அசுர குரு. தேவ குரு தான் நமது குரு பகவான் ஆவார்.அசுர குரு 'சுக்கிரன்' ஆவார்.


புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, பிறப்பில் குரு திசை நடக்கும்.


குரு திசை சரியாக 16 வருடங்கள் கொண்டது.


தட்சிணாமூர்த்தி வேறு குருபகவான் வேறு


 


குருவுக்குரிய பரிகாரங்கள்


வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சினா மூர்த்திக்கு கொண்டை கடலையை ஊற வைத்து மாலையாக கோர்த்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து நெய் திபமேற்றி வழிபடுவது நல்லது.

 

ஐந்து முக ருத்ராட்சம் அணிவது குரு எந்திரம் வைத்து வழிபாடு செய்வது, சர்க்கரை நோட்டு புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்தல், வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம். புஷ்பராக கல்லை அணிவது நற்பலனை தரும்.

மோகனா  செல்வராஜ்