உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரியன் பெயர்ச்சி ஆவதால் சற்று கடினமான கால கட்டமாக இருக்கும்.
தீமையை கண்டு சீற்றம் கொண்டு தீ போன்று கொதிக்கும் தர்ம நெறியுடைய தனுசுராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசியிலே இருப்பது நன்மை என்றாலும், எதிலும் பொறுமையையும், நிதானத்தையும் கடைபிடிப்பது அவசியம். கோபத்தை தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.
பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் எந்த பிரச்னை வந்தாலும் பொறுமையை கடைபிடியுங்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வந்து நீங்கும்.
புதிய நபர்களை முழுமையாக நம்பவேண்டாம். பொறுமை அவசியம். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. அண்டை, அயலாரால் ஆதாயம் ஏற்படும். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள்.
தொழில் ரீதியாக, மூத்த அதிகாரிகள் அல்லது அரசாங்கத்திடமிருந்து பிரச்சினைகள் இருக்கலாம். மேலும், உங்கள் எதிரிகள் உங்கள் பாதையில் தடைகளை உருவாக்க முடியும், இது உங்கள் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும். கடன் கொடுப்பது, வாங்குவதைத் தவிர்க்கவும்.
சூரியனின் இந்த மாற்றம் உங்கள் மன அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கக்கூடிய சில சட்ட சிக்கல்களையும் உருவாக்கக்கூடும். பேச்சின் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
வாழ்விற்கு தேவையான முக்கிய ஆலோசனைகள் பெரியோர்களிடமிருந்து கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை.
தந்தைக்கு செலவினங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. உங்கள் திறமை வெளிப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் லாபம் உண்டு. எந்த செயலிலும் நன்கு சிந்தித்து செயல்படுங்கள். பொறுமை உங்களுக்கு பெருமையை தேடி தரும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். பல வகையில் லாபம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 20, 21, 22.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ராகவேந்திரரை அல்லது சாய் பாபா போன்று குருவின் திருவடிகளை தொழுது வாருங்கள்.
உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய மாதம். அனைத்து சூழ்நிலைகளையும் அனுசரித்து செயல்படும் மகரராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதால் நன்மை என்றாலும் ஜென்ம சனியின் தாக்கம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்த்து நன்கு சிந்தித்து செயல்படுங்கள்.
யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எதிலும் பொறுமையும், நிதானமும் அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு இருந்தாலும் தேவைக்கேற்ப சமாளித்து விடுவீர்கள். மற்றவர்களுக்கு எந்த வாக்குறுதியையும் தர வேண்டாம்.
மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். உடன் பிறப்புகளுடன் கருத்து மோதல்கள் வந்தாலும், ஆதாயம் உண்டு. அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். தாயால் அனுகூலம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் ஆதாயம் உண்டு. வீடு, வாகனத்தை அழகு படுத்துவீர்கள்.
பணியாளர்கள் அவர்களின் மேலதிகாரிகள், சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது அவசியம். தொழில் ரீதியாக, உங்கள் கூட்டாளிகளுடன் மோதல் ஏற்படலாம், இது சில மன அழுத்தங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தும்.
உங்கள் வேலையில். சில தேவையற்ற தாமதங்கள் ஏற்படக்கூடும், அவை மன உளைச்சலை ஏற்படுத்தும் மற்றும் சில நேரங்களில் நீங்கள் உதவியற்றவர்களாக உணரக்கூடும்.
கமிஷன் மற்றும் தொலை தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களுக்கு சேவை செய்வதாலும், உதவி செய்வதாலும் தேவையற்ற பிரச்னைகளும், தீயகர்மாவும் குறையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 22, 23, 24.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஸ்ரீ ஆஞ்சநேயரை பூஜியுங்கள்.
ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் நல்ல பலன்கள் தரக்கூடும். தன்னை சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறையும், தியாக உணர்வும் மிக்க கும்பராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனமுடன் செயல் பட வேண்டிய காலம் ஆகும். முன்யோசனை இன்றி எந்த காரியத்திலும் இறங்காதீர்கள்.
புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை முழுமையாக நம்பி செயல்பட வேண்டாம். தவறான ஆலோசனையால் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சுயமாக நன்கு சிந்தித்து செயல்படுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கோபத்தையும் பிடிவாதத்தையும் தவிர்த்தால் இல்லத்தில் இன்பம் பொங்கும். பொருளாதார நிலையில் திருப்தி உண்டு. உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். மன உறுதி அதிகரிக்கும். எதிர்காலம் பற்றி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.
இந்த பெயர்ச்சியால் உங்கள் போட்டித் திறன்கள் சிறப்பாக இருக்கும், இது வேலை, தொழில், வியாபாரத்தில் போட்டி போட்டு முன்னேற்றத்தை கொடுக்கும்.
ஒரு புதிய வேலையை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் பொறுப்பு அதிகரிக்கும்.
மாத பிற்பகுதியில் எதிர்பாராத அதிர்ஷ்டமும், தன வரவும் உண்டு. தந்தை வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். மூத்தோர்களிடமிருந்து முக்கிய அறிவுரைகள் கிடைக்கும். தொழிலில் மற்றும் உத்தியோகத்தில் மேன்மையான பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமை அங்கீகரிக்கப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடியும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 25, 26.
பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை சனிக்கிழமையில் பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும்.
ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நிகழ்வதால் உங்களின் திட்டமிடல் பெரியளவில் வெற்றியதை தராமல் போகலாம்.
வாழ்வில் எதையும் எளிதாக எடுத்து கொண்டு சிறப்பாக செயல்படும் மீனராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதாலும், உங்கள் ராசியிலே செவ்வாய் சஞ்சரிப்பதாலும் இந்த காலக்கட்டம் லட்சமி கடாட்சம் உண்டாகும்.
மூத்தோர்களின் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கை வந்து சேரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.
இதனால் தொழில், வேலையில் திட்டமிட்ட நேரத்தில் பணியை முடிப்பதில் காலதாமதம் ஆகலாம். மேலதிகாரிகளுடன் சில சிக்கல்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம், அவை தேவையற்ற மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்கக்கூடும்.
இந்த காலகட்டத்தில் விழிப்புணர்வும் மற்றும் நம்பிக்கையும் மிக அவசியம். . உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகளில் சில மனக்கசப்புகள் மற்றும் ஈகோ ஏற்படுத்தும்.
திருமண உறவில் எளிதில் எரிச்சலையும் அடைய நேரிடும்.
உங்கள் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடன் பிறப்புக்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். அண்டை அயலாரின் ஆதரவு உண்டு.
தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வீடு மற்றும் வாகன பழுது ஏற்பட்டு சீர் செய்வீர்கள். குழந்தைகளுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். குழந்தைகளை கவனமாக கவனித்தால் வீண் பிரச்னைகளை தவிர்க்கலாம். காதல் விஷயங்களில் கவனம் தேவை. குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 27, 28.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ துர்க்கைக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் நன்மை கிட்டும்.
மோகனா செல்வராஜ்