இன்றைய ராசிபலன் 18-07-2020

 மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மனசாட்சிபடி செயல்படும் நாள்.


ரிஷபம்: இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சுப சுபமுயற்சிகளில் இடையூறு உண்டாகும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். சேமிப்பு குறையும். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள்.


மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம்கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும்.  தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


கடகம்: இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் ஓரளவு ஆதரவாக இருப்பார்கள்.


சிம்மம்: இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும்.


கன்னி: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத் தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.


துலாம்: இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்து கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும்.


விருச்சிகம்: கலைஞர்களுக்கு மனகஷ்டம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை காணப்படும். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு. சுபநிகழ்ச்சிகள் தள்ளிப்போனாலும் நல்லபடியாக நடக்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை முதலீடு செய்யாது இருப்பது நல்லது. வேலையில் மேலதிகாரிகளிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்ப்பது உத்தமம். எதிலும் கவனம் தேவை.


தனுசு: இன்று நீங்கள் எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பெண்களுக்கு தேவையில்லாத குழப்பம் ஏற்பட்டு பின் சரியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர்.


மகரம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.கடினமான பணிகளை எளிதாக முடித்து மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பெண்களுக்கு உழைப்பின் காரணமாக நல்ல பலன் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும்.


கும்பம்: . உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும்.  குடும்பத்தில் பிரச்னைகள் மறைந்து அமைதி நிலவும். இன்று தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.அலுவலகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். வியாபாரத்தில் புதிய முயற்சியின் காரணமாக லாபம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நற்செய்தி கிடைக்கும்.

 

மீனம்: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும்.குடும்ப நிதிநிலை பெரிதாக ஏதும் பாதிக்க வாய்ப்பில்லை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நெருங்கிய நண்பர்களால் மனக்கஷ்டம் உண்டாகலாம். அலுவலக விஷயங்களில் நிம்மதி கிடைக்கும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள்.

 

மோகனா  செல்வராஜ்