இன்றைய ராசிபலன் 17/07/2020

 



மேஷம்: சொத்து வாங்குவது பற்றிய பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பிரியமானவர்களை சந்திப்பதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கலைத் துறையினரின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.

 

ரிஷபம்:  ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில காரியங்களை போராடி முடித்தீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். உங்களை பற்றி தவறாக யார் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். பெண்களின் நீண்ட நாளைய கவலை தீரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம்.

 

மிதுனம்: விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக் கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

 


கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலுவலகத்தில் நிலுவைப் பணிகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர்.

 

சிம்மம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த் திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


கன்னி: இதுவரை இருந்த அலைச்சல் கோபம், டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் நீங்கள் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.


துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்ல போய் பொல்லாப்பில் முடியும்.எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். ரகசியங்களை வெளியிட்டு சிக்கலில் மாட்ட வேண்டாம். உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை செய்வதை தவிர்க்கவும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.


விருச்சிகம் : வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தில் பலன் கிடைக்க தாமதம் ஆகலாம். பெண்களுக்கு தெய்வ வழிபாடு ஒன்றுதான் நிம்மதியைத் தரும். தேவையற்ற பயங்களால் கவலை கொள்வீர்கள். பணியாளர்கள் சோம்பலை ஒழிக்க வேண்டும்.


தனுசு: வழக்கு சாதகமாக திரும்பும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். தொட்டது துலங்கும் நாள்.


மகரம் : பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் திறமைகேற்ப நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் உதவிகரமாக இருக்கும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளை செய்வீர்கள்.


கும்பம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். வெளியில் இருந்து வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.


மீனம்: அலுவலகத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. பெண்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும். விசா தொடர்பான முயற்சியில் முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.


மோகனா  செல்வராஜ்