இன்றைய ராசிபலன் 15/07/2020


மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாக வேண்டியிருக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.


ரிஷபம்: விலை பொருட்களை கவனமாக கையாளுங்கள். கணவன் -மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வரக் கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


மிதுனம்:இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


கடகம்: இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும்


சிம்மம் : எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.உறவினருடன் விட்டுக் கொடுத்து சென்று பிரச்னைகளை முடித்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் சகஊழியர்கள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வர். திட்டமிட்ட முயற்சியில் வெற்றி கைக்கு அருகில் இருந்தும் சில தடுமாற்றங்கள் ஏற்படக்கூடும்.


கன்னி: பெண்களுக்கு வீண் செலவுகள் இருக்கக்கூடும். பிள்ளைகளின் மூலம் மகிழ்ச்சிக் குறைவு ஏற்படலாம். பிறரை நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

 

துலாம்: மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

 

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

தனுசு: நட்பு வட்டம் விரியும். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை வியாபாரத்தில் மறைமுக போட்டிகளைச் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னையை நினைத்து கவலைப்பட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாள் கனவு நிறைவேறும்.


மகரம்: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.


கும்பம்: இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.


மீனம்: நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும் அலுவலகத்தில் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. கலைத்துறையினர் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வங்கியில் விண்ணப்பத்திருந்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.


மோகனா  செல்வராஜ்