தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி


வீரன் அழகுமுத்துகோன், நாவலர் நெடுஞ்செழியன் படங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.


அண்ணா அறிவாலயத்தில் இருவரது உருவ படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். எம்.பி கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சிக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பால்  விற்பனை, மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளையும் மூட வருவாய் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 


ஆலங்குளம் அரசு மருத்துவமனை தற்காலிகமாக 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர், செவிலியருக்கு கொரோனா உறுதியானதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ம் தேதி கூட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் 14-ம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. 


கொரோனா சிகிச்சைக்கு Itolizumab மருந்தை பயன்படுத்த இந்திய கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்துள்ளது. அதிமான பாதிப்பு உள்ளவர்களுக்கு அவசர தேவைக்கு மட்டும் Itolizumab மருந்தை பயன்படுத்தலாம் என DCGI தெரிவித்துள்ளது.