இன்றைய ராசி பலன் – ஜூலை 14,2020


மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பண விஷயத்தில் கறாராக இருங் கள். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.   


ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.    


மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்ந்து பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்பு கூடும் நாள்.   


கடகம்: சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.


சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பி தருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்படும் நாள்.


கன்னி: உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கியை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

 

துலாம் : உத்தியோகத்தில் சூட்சுமங்களைக் கற்க பொறுமை தேவைப்படும். எதிர்பாலினத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும்.

 

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீர எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.  கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர்  அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கலைத் துறையினருக்கு நிம்மதியும், சந்தோஷமும் அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வர்.

 

தனுசு : நண்பர்களிடையே சுமூக உறவு ஏற்பட விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். வாழ்வில் முன்னேற அதிக அக்கறை காட்டுவீர்கள்.பணவரத்து கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் மேன்மை உண்டாகும். 


மகரம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய் வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.இன்று ஏதாவது மனகவலை இருக்கும்.  எதிலும் சாதகமான போக்கு காணப்படும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தடை தாமதம் ஏற்படலாம்.


கும்பம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சிறு தடங்கல்கள் சந்திக்க நேரும். எதிர்பார்த்த பணம் வருவது தாமதப்படும். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த எடுக்கும் முயற்சிகள் நல்லபலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.


மீனம்: மனதைரியம் கூடும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


மோகனா  செல்வராஜ்