இன்றைய ராசிபலன் 12/07/2020


மேஷம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போராடிலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


ரிஷபம்: வீடு வாங்க திட்டமிட்டவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும். வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வீர்கள். மன தைரியம் அதிகரிக்கும்.


மிதுனம்: கடந்த கால சுகமான அனுபவங்களை சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கடகம்: வியாபாரிகளுக்குப் பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். அலுவலகத்தில் முன்னர் செய்த உழைப்பின் பலனை இப்போது பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்களிடம் இருந்து வந்த மனஸ்தாபங்களை உங்களின் மனைவி சரிசெய்துவிடுவார்.

 

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது.லேசாக தலை வலிக்கும். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

 


கன்னி: குடும்பத்தில் சிறிய மனவருத்தங்கள் வந்து நீங்கும். பிள்ளைகளின் மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தாய்மாமன் வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.

 

துலாம்:  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுகொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.

 

விருச்சிகம் : குடும்பச் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்னை தீரும். தொழிலில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தால் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் செயல்கள் சகஊழியர்களால் பாராட்டப்படும். நல்லவர்களின் ஆசி கிடைக்கும்.

 

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழையகடனை பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள் .

 


மகரம்: புதிய முயற்சிகளில் சில தடைக்கு பிறகு அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். மனைவி வழி உறவினர்கள் மூலம் கடன்களை அடைப்பதற்கான உதவிகள் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

 

கும்பம் : குடும்பத்தினர் உங்களின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பெண்களுக்கு மனஅமைதியற்ற சூழல் ஏற்படும். மேலதிகாரிகளின் மூலம் உங்களின் நிறை, குறைகளை அறிந்து கொள்வீர்கள். நியாயமான வழியில் பணம் சேர்ப்பீர்கள்.

 

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேலைகளை இழுத்து போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினை வந்து நீங்கும் . சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.

 

 

மோகனா  செல்வராஜ்