கரோனாவில் இருந்து மீண்டவரை வைரஸ் மீண்டும் பாதிக்குமா

 



கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த ஒருவருக்கு மீண்டும் அந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால், இதற்கான பதில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் விஞ்ஞானிகளின் பதில் சாத்தியமில்லை என்பதே.


சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், கரோனா பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு, அந்த தொற்றை எதிர்க்கும் ஆற்றல் உடலில் உண்டாகிவிடுவதாக விளக்கம் அளித்துள்ளனர்.


ஆனால், இந்த நோய் எதிர்ப்பு சக்தி என்பது எந்த அளவுக்கு பலனளிக்கும், எத்தனை காலத்துக்கு செயல்படும் என்பது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.