இன்றைய ராசிபலன் 09/07/2020


மேஷம்: தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.


ரிஷபம்: இன்று உத்தியோக ரீதியாக செல்லும் பயணம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.


மிதுனம்: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.


கடகம்:எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பதை யோசித்துப் பேசுங்கள். குடும்பத்தினருடன் விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். கலைத்துறையினருக்கு மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். தொழில் தொடங்கும் முயற்சிக்கு நண்பர்கள் உதவுவர்.


சிம்மம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். நன்மை கிட்டும் நாள்.


கன்னி:இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


துலாம்:இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களால் ஓரளவு அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.


விருச்சிகம் : கடின உழைப்பால் நற்பெயர் எடுப்பீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தைப் புது இடத்திற்கு மாற்றத் தீர்மானிப்பீர்கள். உத்தியோகத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் ஏற்படும். கலைஞர்களுக்கு புது வாய்ப்பு கிடைக்கும்.


தனுசு: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் தைரியமான முடிவுகள் எடுப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.


மகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் ஒரு புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.


கும்பம்:இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக தூர பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.


மீனம்:இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் மகிழ்ச்சியை தரும்.


மோகனா  செல்வராஜ்