இன்றைய ராசிபலன் 07/07/2020


மேஷம்: வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுபவிசேஷங்களுக்கு செலவழிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னை தீரும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்தபடி இருக்கும். அக்கம் பக்கத்தினரிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.


ரிஷபம்: உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


மிதுனம்: இன்று சந்திராஷ்டமம் நீடிப்பதால் தன்னம்பிக்கை குறையும்.இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து  செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


கடகம்: பெண்கள் அக்கம் பக்கத்தினரிடையே விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அநாவசியச் செலவுகளால் சோர்வடைவீர்கள். சத்தாண உணவை உண்டு உடல் நலனை பாதுகாக்கவும். வியாபாரிகளுக்கு மறைமுக எதிர்ப்புகளால் தொல்லை ஏற்படக்கூடும்.


சிம்மம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.


கன்னி: குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.இன்று தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பணிகளை வெற்றிகரமாக செய்து முடித்து மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவார்கள்.


துலாம்: பெண்களுக்கு தந்தையின் மூலம் உதவி கிடைக்கும். பணவரவில் சிறிய அளவில் அதிருப்தி உண்டாகலாம். கணவன், மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படக்கூடும். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.


விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.


தனுசு: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள் வீண் அலைச்சல், மனக்குழப்பம் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.


மகரம்: பெண்கள் இங்கிதமாகப் பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பர். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் நல்ல வரன் அமையும். உறவினரின் மூலம் உதவி கிடைக்கும். கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அமையும்.

 

கும்பம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மீனம்: . குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்று கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது. மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல்  பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.  


மோகனா  செல்வராஜ்