இன்றைய ராசிபலன் 03/07/2020


மேஷம்: கடந்த நாட்களில் கணவன், மனைவிக்குள் இருந்து வந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அலுவலகத்தில் பாதியில் நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.


ரிஷபம்: பணியாளர்களுக்கு சிறு சிறு பிரச்சினைகளும், சங்கடங்களும் ஏற்படக்கூடும். பெண்களுக்கு எதிர்பாராத மாற்றங்களால் வீண்அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். உறவினர்களை அனுசரித்து செல்வது


மிதுனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.


கடகம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.


சிம்மம் : நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பார்கள். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களின் மத்தியில் உங்களின் அந்தஸ்து உயரும். வியாபார முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.


கன்னி: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வார்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.


துலாம்: எதிலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவதால் தோல்விக்கு இடமில்லை. பெண்கள் அறிவுப் பூர்வமாக பேசி எல்லோரையும் கவர்வர். பிள்ளைகள் தங்களின் பொறுப்புகளை


விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உணர்ந்து செயல்படுவர். புண்ணிய செயல்களை மேற்கொள்வீர்கள்.


தனுசு: தனிப்பட்ட வாழ்க்கையில் சில புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். பேச்சு சாமர்த்தியத்தால் மேலதிகாரியிடம் பாராட்டுப் பெறுவீர்கள். தயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாக பேசி வசூலிக்கப்பாருங்கள்.வாகனங்களைப் புதுப்பிப்பதற்காக கூடுதல் செலவுகள் செய்யநேரிடும்.


மகரம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப் பாட்டிற்குள் வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.உற்சாகமான நாள்.


கும்பம்: பெண்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி காண்பர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருக்கும் நிலுவைக் கடன்கள் வசூலாகும். நண்பர்களிடம் கடந்த கால நினைவுகளை கூறி மகிழ்ச்சி கொள்வீர்கள்.


மீனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


மோகனா  செல்வராஜ்