அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்.

 எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில், 1977ல் விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


விழுப்புரம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கிருஷ்ணன்(86) உடல்நலக் குறைவால் காலமானார். விழுப்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் கிருஷ்ணன் உயிர் பிரிந்தது.


 தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. 29 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்


தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில், போலீசாரால் தாக்கப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்த, கட்டிட தொழிலாளி கணேசமூர்த்தி வீட்டுக்கு, திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.சென்னை, மதுரை மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், இன்று எவ்வித தளர்வுமின்றி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.


போலீஸ் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்பதால், மக்கள் வெளியில் செல்ல வேண்டாம்.. காய்கறி, மளிகை கடை என, எந்த கடைகளும் திறந்திருக்காது; வாகனங்கள் எதுவும் இயங்காது.


கர்நாடகாவில் ஜூலை 5 ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் போலீஸ் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததால் உறிவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.


வீரகேரளம்புதூர் காவல் காவல்நிலையத்தில் விசாரணையின் போது குமரேசனை போலீசார் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.ராஜஸ்தானில் ஊரடங்கை மீறி மகன் திருமணத்தை நடத்தி 15 பேருக்கு கொரோனா வைரசை பரப்பிய மணமகன் தந்தைக்கு மாவட்ட நிர்வாகம் ரூ 6 லட்சம் அபராதம் விதித்தது.


ஊரடங்கு விதிகளை மீறி அதிக நபர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தை மீது ஊரடங்கு சட்டத்தை மீறியது, கொடிய தொற்று நோயை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது