மாலை நேரச் செய்திகள்
சென்னையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களின் வசதிக்காக 41 வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா
தமிழகத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியவர்களிடம் ரூ.10.44 கோடி அபராதம் வசூல்
4,50,479 வாகனங்கள் பறிமுதல்
5,89,794 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு
5,48,842 வழக்குகள் பதிவு -- தமிழக காவல்துறை
தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்திருப்பதாக தகவல்
* பொதுவார்டில் நாள் ஒன்றுக்கு ரூ.5,000 ரூபாய் முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் என தகவல்
* தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.15,000 கட்டணம் நிர்ணயம் என தகவல்..
2 நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் தங்கள் வீடுகளில் இருந்து காணொலி மூலம் அவசர வழக்குகளை விசாரிப்பர் என அறிவிப்பு.
கடந்த 1ம் தேதி முதல், உயர்நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தங்களது அறையில் இருந்து விசாரணை நடத்திய நிலையில் திடீர் மாற்றம்.