பிரபல இயக்குநர்-திடீர் அனுமதி


பிரபல இயக்குநர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் திடீர் அனுமதி


2018-ம் ஆண்டு ராஜூ காடு என்ற தெலுங்கு படத்தை இயக்கிய சஞ்சனா ரெட்டி அடுத்ததாக முன்னாள் பளு தூக்கும் வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையுமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி வருகிறார்.


இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்தநாளன்று வெளியானது.

இந்நிலையில் நடிகை சஞ்சனா ரெட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.