குறுஞ்செய்திகள்


எச்1 பி , எச் 4 விசா இந்த ஆண்டு இறுதி வரை ரத்து.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு


அமெரிக்காவில் வந்து வேலை செய்வதற்கு வழங்கப்படும் H-1B மற்றும் H-4 விசாக்கள்(H-1B ) இந்த ஆண்டு இறுதி வரை வழங்க தடை விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்


H1B விசாக்களை நிறுத்தி வைத்த அமெரிக்கா ... எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது- தி மு க  தலைவர்   ஸ்டாலின் கண்டனம்  தெரிவித்துள்ளார். அவர் மேலும்  கூறியதாவது   மத்தியில்  ஆட்சி  புரியம்  பா   ஜா  க அரசு இதற்கும்  ஒரு தீர்வு காண வேண்டும்    என்றார்  


இந்த விசா ரத்து அறிவிப்பு முறையான ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கும், டூரிஸ்ட் விசாவில் இருப்போருக்கும் பொருந்தும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேச்சமயத்தில் நிரந்தரமாக பிற நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களது குடும்பத்தினர் இந்த உத்தரவால் பாதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது


கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 2020 இறுதி வரை வேலை விசாக்களை நிறுத்திவைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்பால் தான் ஏமாற்றமடைந்தாக கூறியுள்ளார்.


''அதிருப்தி அளிக்கிறது'' - ட்ரம்பின் விசா தடை நடவடிக்கை குறித்து சுந்தர் பிச்சை கருத்து


எனினும் இந்த இடைநீக்க உத்தரவு ஏற்கனவே அமெரிக்காவில் விசாக்களில் இருப்பவர்கள் பாதிக்காது. பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் பட்டம் பெற்றபின்னர் தகுதிபெறும் விருப்ப நடைமுறை பயிற்சியையும் (OPT) பாதிக்காது.


__________________


எல்லையில் வீர‌மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர் மேஜர் அஜய் ரத்தோர் நேரில் ஆறுதல்


பழனியின் குடும்பத்தினருக்கு ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கினார்


சீன ராணுவத்துடனான மோதலில் காயமடைந்த இந்திய வீரர்களுக்கு ராணுவ தளபதி நராவனே நேரில் ஆறுதல்


* லடாக்கின் லே-யில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்


_______________________


கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ள இந்திய - சீன ராணுவம் ஒருமித்த முடிவு என தகவல்


கிழக்கு லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு என தகவல்


இந்திய பகுதிகளை சீனாவுக்கு விட்டுக்கொடுத்து நமது ராணுவத்திற்கு பிரதமர் துரோகம் செய்துவிட்டார் 


இந்திய பகுதிகளை சட்டவிரோதமாக கைப்பற்ற சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை - ராகுல் காந்தி


______________________


"கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதி இல்லை"


* "ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்தவர்களின் கட்டணம் திரும்ப கொடுக்கப்படும்"


________________________


பயோ கேஸ் விற்பனைக்கு நாமக்கல் மற்றும் சேலத்தில் 5 சில்லறை விற்பனை நிலையங்கள் திறப்பு 


* தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.25 கோடி மதிப்பீட்டில் பயோ கேஸ் உற்பத்தி பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்


__________________________


கல்வி கட்டணம் வசூலிக்காமல் தனியார் பள்ளிகளால் ஆசிரியர்களுக்கு எவ்வாறு ஊதியம் வழங்க முடியும்..? - உயர்நீதிமன்றம்  


* கட்டணம் வசூலிக்க அரசு தடை விதித்த உத்தரவை தனியார் பள்ளிகள் எதிர்த்த வழக்கில் ஐகோர்ட் கேள்வி


* தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி


ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டாமா?


* கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் உத்தரவு


___________________


முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும்.   மதுரை அம்மா உணவகங்களில் கட்டணமில்லாமல் உணவு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  - டிடிவி தினகரன்


____________________கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை, மகன் பலியான சம்பவம் - மு.க.ஸ்டாலின் அறிக்கை!


வாய்த்தகராறு காரணமாக, அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை, உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அனைத்து இந்தியா  சமத்துவ  கட்சி தலைவர் சரத்குமார்  வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறையில் இருந்த இருவரது மரணம், அதிர்ச்சிக்குரியதாகவும் கண்டிக்கத்தக்கதாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளார். 


காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் காவலர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள் என்றும், அதனால் தான், அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகப்படுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


கோவில்பட்டி கிளைச் சிறையில் கைதிகளாக இருந்த தந்தையும் மகனும் இருவரும் ஒரே இரவில் 10 மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் காவல்துறை சிறைத்துறை வட்டாரத்தில் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது.


நாளை  கடைகள்  அடைக்கப்படும்  என்று  தமிழ் நாடு வணிகர் சங்கம் அறிவித்துள்ளது .


தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த தந்தை, மகனின் உடல்களை 3 மருத்துவர்கள் கொண்ட குழு உடற்கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு; உடற்கூடாய்வை வீடியோவாக பதிவு செய்யவும் உத்தரவு


சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம்


4 வாரத்தில் பதிலளிக்க சிறைத்துறை ஏடிஜிபி-க்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் உயிரிழந்தது, காவல்துறை நிகழ்த்தியிருக்கும் வன்முறை என்பது தெளிவாகத் தெரிகிறது - கனிமொழி எம்.பி.


_____________________________


தெர்மல் ஸ்கேனர் கொள்முதலில் என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்


______________________


"ரூ. 1.5 கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஆந்திராவிலிருந்து காரில் கடத்தி வந்தோம்"


* புதுக்கோட்டையில் பிடிபட்ட 2 கடத்தல்காரர்கள் போலீசாரிடம் வாக்குமூலம்


______________________