குறுஞ்செய்திகள்- ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து

 திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் இந்த வருடம் நடைபெற இருந்த ஆனி பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது


_________________________________


இந்தியாவில் கொரோனா தொற்று:


பாதிப்பு எண்ணிக்கை 4,40,215லிருந்து 4,56,183 ஆக அதிகரிப்பு


குணமடைந்தோர் 2,48,190லிருந்து 2,58,685 ஆக உயர்வு


உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,011லிருந்து 14,476 ஆக அதிகரிப்பு


சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேர் கொரோனாவால் பாதிப்பு.


கொரோனாவால் பாதித்த 1,83,022 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை


இன்று மாலை சேலம் செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


_______________________


மதுரையில் பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகரை தாக்க முயன்றதாக எழுந்த புகாரில் மதுரை கிழக்குச் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது


_____________________


பெங்களூரில் ரூ.4 ஆயிரம் கோடி முறைகேடு வழக்கில் சிக்கிய ஐ.ஏ.எஸ்.அதிகாரி, வீட்டில் சடலமாக மீட்பு


_______________________


மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு புதுமணத் தம்பதி 50 படுக்கைகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.


__________________


ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கிகளிடம் வாங்கிய கடன்களில் மோசடி குற்றச்சாட்டு, வீடியோகான் நிறுவனத் தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு


___________________


இந்த ஆண்டு குறைந்த எண்ணிக்கையுடன் ஹஜ் நடைபெறும் - சவுதி அரேபியா அரசு அறிவிப்பு


__________________


கோவில்பட்டி சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்த சம்பவம், தமிழகத்தில் வியாபாரிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளதுடன், இன்று விசாரணை நடத்த உள்ளது.


__________________