குறுஞ்செய்திகள்-கொரோனா தடுப்பூசி

 குறுஞ்செய்திகள்: 


கொரோனா தடுப்பூசி பரிசோதனை பன்றிகளிடம்  வெற்றி - ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள்


__________________


முழு பொதுமுடக்கத்திற்கு பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை தருகிறார்கள் 


- சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்


தேனி மாவட்டத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


* மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிப்பு


* நாளை மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக ஆட்சியர் விளக்கம்


திண்டுக்கல்லில் இருந்து மதுரை க்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் ஜீன் 30 வரை வாடிப்பட்டி வரை மட்டுமே இயங்கும்.


நத்தத்தில் இருந்து மதுரை க்கு இயக்கப்பட்ட பேருந்துகள் நாளை முதல் ஜீன் 30 வரை கடவூர் வரை மட்டுமே இயங்கும்.


தமிழ்நாட்டில் இன்று 2516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது


தமிழ்நாட்டில் 7ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியது....


சென்னையில் மட்டும்  1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


___________________________கொரோனாவை பதஞ்சலியின் ஆயுர்வேத மருந்து குணப்படுத்தும் என்று விளம்பரப்படுத்துவதை நிறுத்துங்கள்  - பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தல்


__________________________


மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்


* ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம்


* https://t.co/rXiH8TWiUM என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்