உறுப்புகள் தானம்- நெகிழ்ச்சி சம்பவம்


புளோரிடாவில் வசிக்கும் டெர்ரி என்பவரது கணவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். மாடியில் இருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த தனது கணவரின் உறுப்புகளை மற்றவர்களின் நலனுக்காக தானம் செய்தார்.


 அவரது இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளால் பல்வேறு நோயாளிகள் குணமடைந்து நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.


அந்த வகையில் டெர்ரியின் கணவரது சிறுநீரகம் மற்றும் கணையம் ஆகியவை ஜெஃப்ரி என்பவருக்கு பொருத்தப்பட்டது. 


இந்நிலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட சிறுநீரகம் படிப்படியாக செயலிழந்து வருவதாக ஜெஃப்ரி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.


இதனை பார்த்த டெர்ரி தானே சிறுநீரகம் தானம் செய்ய முன்வந்துள்ளார். 


இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு சிறுநீரகத்தை பொருத்தியுள்ளனர்.


16 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த கணவனின் சிறுநீரகத்திற்கு அருகிலேயே தற்போது மனைவியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது.


இதன் மூலம் தனது கணவருக்கு அருகில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக டெர்ரி கூறியுள்ளார்.


அடுத்த பல   வருடங்களுக்கு சிறுநீரகம் நலமுடன் செயல்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பலரும் டெர்ரிக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


உயிர்  இருக்கும் போது இரத்த  தானம் இறந்த பின்பு  கண் தானம் 


நாம் உறுப்பு  தானம் விழிப்புரணர்வு மேற்கொள்வோம்


 நன்றி   வணக்கம்