கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் கொரோனா

 கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய ஊழியர்கள் 15 பேருக்கு கொரோனா பாதிப்பை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.96 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,96,796 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.


உலகம் முழுவதும் கொரோனாவால் 9,903,777 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,357,154 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 57,643 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.59,, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.61-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 22 போலி மருத்துவர்கள் கைது செய்யப்படுள்ளனர். அரக்கோணம், சோளிங்கர், திமிரி கலவை உள்ளிட்ட பகுதிகளில் போலி மருத்துவர்கள் சிக்கினர். போலி மருத்துவர்கள் நடத்தி வந்த கிளீனிக்குகளுக்கு சீல்.