இன்றைய ராசி பலன் 01/06/2020
மேஷம்:
மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சமாளித்து விடலாம் என்ற எண்ணம் வரும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அண்டை, அயலார் உறுதுணையாக இருப்பார்கள். தாய் வழியில் ஆதரவு உண்டு. தாய் மற்றும் உறவுகளால் நன்மை உண்டாகும். அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.
ரிஷபம்:
சமூகத்தின் பால் அதிக அக்கறை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசியிலே சஞ்சரிப்பதும், குருவின் பார்வை உங்கள் ராசியில் இருப்பதும் நல்ல யோகமான அமைப்பாகும். உங்கள் சிந்தனையில் ஒரு தெளிவு பிறக்கும். தோல்விகளில் இருந்து பாடங்களை கற்று கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
மிதுனம்:
உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். கடன் வாங்கும் சூழல், வட்டிக்கு பணம் வாங்கும் சூழல் ஏற்படலாம். தேவையற்ற விஷயங்களில் கருத்து வெளியிடுவதை தவிர்க்கவும். மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து கொள்ளுங்கள். சகோதர வகையில் மனகசப்புகள் வரவாய்ப்புள்ளதால் கவனம் தேவை
கடகம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உங்கள் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் உருவாகும். உங்கள் பேச்சுத்திறமை வெளிப்படும். உங்கள் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு.
சிம்மம்:
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு மாறாத சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 10ல் சஞ்சரிப்பதால் உங்கள் திறமை மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும். புகழ், செல்வாக்கு, அந்தஸ்து உயரும். உங்கள் செயல்களில் திட்டமிட்டு உழைத்து வெற்றி பெறுவீர்கள்.புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்களை சார்ந்தவர்கள் உங்களின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
கன்னி:
தாய் உடல் நிலையில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளிடையே சிறு மனகசப்புகள் வந்து நீங்கும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி உருவாகும். குழந்தைகளின் செயல்கள் உங்களை பெருமைப்பட வைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தனவரவும் உண்டு. மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு ஏற்படும். எதிர்காலம் பற்றிய புதிய திட்டங்கள் உருவாகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
துலாம்:
வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
வீண் வாக்கு வாதங்களையும், தேவையற்ற பிரச்னைகளையும் தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும்
விருச்சிகம்:
சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். குழந்தைகள் விஷயத்தில் அதிக கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ பிரார்த்தனையால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்த்து அனுகூலமான பலன்களை பெறலாம். வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு வாடகை தொடர்பான பிரச்னை உருவாகும்.
தனுசு:
இதுவரை இருந்த தேவையற்ற பிரச்னை, மன அழுத்தம் குறையும். புதிய சிந்தனைகள் மனதில் துளிரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உங்கள் தவறுகளை உணர்ந்து திருத்தி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மேம்படும். தேவைக்கேற்ப பொருளாதார நிலை இருக்கும். குடும்பத்தில் புரிந்துணர்வு அதிகரிக்கும். ஒருவர்க்கொருவர் அன்பை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்
மகரம்:
சகோதர, சகோதரிகளிடையே இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்காலம் பற்றிய புதிய திட்டங்களை யோசிப்பீர்கள். அண்டை, அயலார் உறுதுணையாக இருப்பார்கள். தாய் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவார்கள். வீடு, வாகன வசதிகளை மேம்படுத்துவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்:
குடும்ப விஷயங்களில் அதிக கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வு உண்டாகும். மற்றவர்களின் உதவியை நாடும் சூழலும், கடன் வாங்கும் சூழலும் உருவாகும். பேச்சில் கவனம் தேவை. வீண் பேச்சில் நேர விரயத்தை தவிர்க்கவும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. அவர்கள் உங்கள் செயலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம்:
தாய் மற்றும் உறவுகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். அவசியமில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்கவும். அரசு தொடர்பான ஆணைகளை அனுசரித்து செல்லுங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் செயல்கள் மற்றவர்களால் பாராட்டப்படும். வருங்காலத்திற்கான புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எதிரிகளால் தவறான தகவல்கள் பரப்பப்படும். கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும்.
வடிவமைப்பு திருமதி S.மோகனா செல்வராஜ்