தமிழக பாஜக முன்னாள் தலைவர் காலமானார்.


தமிழக பாஜக முன்னாள் தலைவர் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்


தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார்.


தமிழக பாஜகவின் தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த நிலையில், 92 வயதான அவர் நேற்று வீட்டிலேயே காலமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் ஒரு முறை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பதவி வகித்தார். கே.என். லட்சுமணன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.