குறுஞ்செய்திகள்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆக உயர்வு!


தமிழகத்தில் 22.06.2020  ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா!


உலகளவில் கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 91,87,259 ஆக உயர்வு!
________________________ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி பாக் நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணவ வீரர் ஹவில்தார் தீபக் கார்கி வீரமரணம் அடைந்துள்ளார்


__________________


உச்சநீதிமன்ற உத்தரவின்படி தான் OBC க்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை - மத்திய அரசு


________________________


ஜார்கண்ட் மாநிலத்தில் கரைபுரண்டோடும் ஆற்றில் காருடன் அடித்துச் செல்லப்பட்ட புதுமணத் தம்பதியினரை அப்பகுதி மக்கள் பத்திராமாக மீட்டுள்ள காட்சிகள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.


________________________


நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் செய்துள்ள வித்தியாசமான வாழ்த்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஊரடங்கால் வீட்டில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், வையலின் மூலம் விஜய்யின் குட்டி ஸ்டோரி பாடலை இசைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் இணைந்து, பைரவா, சர்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.