திருநள்ளாறு கோயில்- அனுமதி


திருநள்ளார் என்பது காரைக்கால் மாவட்டத்தில் உள்ள, ஒரு கொம்யூன்பஞ்சாயத்து ஆகும்.இது காரைக்கால் நகரில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து, திருநள்ளார் செல்ல நிறைய பேருந்துகள் உள்ளன.


திருநள்ளார் என்றாலே நம் நினைவுக்கு வருவது, சனி கிழமை தான். நவக்கரக கோயில்களில் சனிக்கரகதிற்கான சனிஸ்வரன் ஆலயம் இந்த ஊரில் தான் உள்ளது. எனவே, வெளியூர் பயணிகள் அருகில் உள்ள நகரமான காரைக்காலுக்கு பயணம் செய்வதே சிறந்தது.


இதற்கு அடுத்த கட்டமாக, உள் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்களுக்கு, கும்பகோணம் சாலை ஒரு நல்ல வழியாகவும், அதிகம் பயன்படுத்துப் படுவதாகவும் உள்ளது.


கும்பகோணத்தில் இருந்து 50 ஐம்பது கிலோமீட்டர் தொலைவில், திருநள்ளார் அமைந்துள்ளது. அது மட்டுமின்றி, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் வழியாகவும் இந்த ஊரினை அடைய வழிகள் உள்ளன.


கொரோனா நோய் பரவலை தடுப்பதின் ஒருபகுதியாக நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதையொட்டி அனைத்து புனித ஸ்தலங்களையும் மூட அரசு உத்தரவிட்டிருந்தது.


சனிபகவான் கோயிலுக்கு குறைவான பக்தர்களே வருகை. உடல்வெப்ப பரிசோதனைக்கு பின் தரிசனத்திற்கு அனுமதி


திருநள்ளாறு கோயிலுக்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கிடையாது'


திருநள்ளாறு கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தனியாக இ-பாஸ் வழங்க இயலாது. பக்தர்களுக்கு தனியாக இ-பாஸ் வழங்க காரைக்கால் அரசு அனுமதி வழங்கவில்லை