அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு - கொரோனா


உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி என மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 50-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 2,325 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது


சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 2,393 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 22 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் பிரசவத்திற்கு வருவோர் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருச்சி சரகத்தில் நடத்தையில் மேம்பாடு தேவைப்படும் 80 காவலர்கள் மக்களின் நேரடி தொடர்பு பணியில் இருந்து மாற்றப்படுவதாக திருச்சி டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.


திருச்சி, கரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 80 காவலர்களுக்கு பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க காவல்நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.சாத்தான்குளம் வழக்கை சிபிசிஐடி முறையாக விசாரித்தால் சிபிஐக்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோரின் முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை நெல்லை சரக டிஜிபி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கில் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் விசாரணை செய்தார்.விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குண்டர் சட்டத்திற்கு எதிராக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கலியபெருமாள், முருகன் ஆகியோரின் மனைவிகள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.