'சீயான் 60'


சீயான் விக்ரம் - கார்த்தி சுப்புராஜ் - அனிருத் - துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது 'சீயான் 60'


நடிகர் சீயான் விக்ரம் தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் 'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார்.


கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷுடன் இணைந்து ‘ஜகமே தந்திரம்’ என்ற படத்தில் பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து அடுத்த வெற்றியைக் கொடுக்க களமிறங்குகிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான நடிகர் ரஜினியின் 'பேட்ட'  பிரம்மாண்ட வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


'ஆதித்ய வர்மா' படத்தின் மூலம் அறிமுகமான துருவ், தன் தந்தையுடன் (விக்ரம்) இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். இந்தக் கூட்டணிக்கு இசையால் மெருக்கேற்ற அனிருத் இணைந்துள்ளார்.