உலக வெண்புள்ளி தினம் 25/06/2020


லூக்கோடெர்மா அல்லது விடிலிகோ (Leucoderma/vitiligo) என்று மருத்துவத்தில் கூறப்படும் வெண்தோல் வியாதி, கிருமிகளால் ஏற்படும் நோயோ தொற்றுநோயோ அல்ல.


இது உடல் அமைப்பு சார்ந்த நோய் (constitutional Disease). நோய் எதிர்ப்பு ஆற்றலின் தடுமாற்றத்தால், தவறுகளால் உருவாகும் விளைவு (Auto Immune Disease).


இந்நோயை மற்றொரு தோல் நோயான குஷ்டத்தோடு (Leprosy) தொடர்புபடுத்தி ‘வெண்குஷ்டம்’ என்று கருதுவது தவறு.


மருத்துவத் துறையினரே ‘வெண்குஷ்டம்’ என்று கூறுவது பெருந்தவறு. பேச்சு வழக்கில், ஒரு புரிதலுக்காக ‘வெண்தோல்’ பிரச்னையை நோய் என்று குறிப்பிட்டாலும் இதனை குறைபாடு (Deficiency) என்ற பொருளிலேயே அறிய வேண்டும்.


உலக மக்கள் தொகையில் 2 சதவிகிதம் பேர் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன புள்ளி விவரங்கள்.


வெண்புள்ளி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் இந்நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜாக்சன் மறைந்த தினமான ஜூன் 25-ம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


வெண்புள்ளி நோயால் நாடுமுழுவதும் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய்க்காக லூகோஸ்கின் என்ற மூலிகை மருந்தைடிஆர்டிஓ கண்டுபிடித்துள்ளது.


இம்மருந்தை 300 முதல் 400 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது.


மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் வரலாம். தைராய்டு, சர்க்கரை நோய், வைட்டமின் பி 12 குறைபாட்டால் ஏற்படக்கூடிய ரத்தச்சோகையின் தீவிர நிலை (Pernicious Anemia) போன்ற நோய்களோடு சேர்ந்தும் வரலாம்.


இதில் பலவகைகள் உண்டு.உதடு, கை, கால் விரல்களில் ஏற்படும்.உதடு, பிறப்புறுப்பு போன்ற இடங்களில் மட்டும் பாதிப்பு இருக்கும். பெண்களுக்கு மார்பகங்களிலும் வெண்புள்ளிகள் வரலாம்.


அதோடு மேற்பூச்சாகப் பூசக்கூடிய களிம்புகளும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். களிம்புகளால் குணமாகவில்லை என்றால், `ஸ்கின் க்ராப்டிங்க்'  (Skin Grafting) மூலம் சரிசெய்யலாம். தொடையிலிருந்து நிறமிழக்காதத் தோலை எடுத்து நிறமில்லாத இடத்தில் அறுவைச்சிகிச்சை மூலம் மாற்றி விடுவார்கள்.  


சத்து குறைபாடு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. இது தொற்று நோய் அல்ல, கரோனா போல உயிர்க்கொல்லி நோயும் அல்ல. ‘வெண்புள்ளி உள்ளவர்களை வெண்குஷ்டம் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடாது’ என அரசு ஆணையிட்டுள்ளது.


இதன் பாதிப்பைக் கட்டுப்படுத்தவோ குணப்படுத்தவோ முடியும். எனவே,  வெண்புள்ளிகள் வந்துவிட்டால் முதலில் தோல் நோய் மருத்துவரைப் பார்க்க வேண்டும். பாதிப்பிற்கேற்ப சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார். 


வெண்புள்ளி உடலில் ஏற்படுத்தும் பாதிப்பைவிட, சகமனிதர்களின் பார்வையாலும் சமூகப் புறக்கணிப்பாலும் ஏற்படும் மன அழுத்தம்தான் அதிகம்.


இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால், தகுதியும் திறமையும் இருந்தும் அவர்களால் கல்வியிலும் வேலையிலும் முழுமையாக ஈடுபட முடியாத நிலையே தொடர்கிறது.


அதீதமான மன உளைச்சல் (Excess Mental strains) அதிர்ச்சி, பயம், பதற்றம், ஆழ்மனத் துயரம் போன்ற கடுமையான மனநிலை பாதிப்புகளாலும் இப்புள்ளிகள் தோன்றுவதற்கு சாத்தியமுள்ளது . ஹோமியோபதியில் மட்டும் இந்த அணுகுமுறை உள்ளது.


சர்வதேச சிகிச்சை அனுபவங்களின் வாயிலாக வெண்தோல் வியாதியை குணப்படுத்த ஹோமியோபதி மருத்துவத்துக்கு அதிகபட்ச சாத்தியம் உள்ளது என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்