சிஜி தாமஸ் தலைமை - பரிந்துரை


 


வழக்கமாக ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் ஆனால் இந்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பதில் கொரோனோ நோய் தொற்று பரவல் காரணமாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது.


எனவே இதனை கருத்தில் கொண்டு மாணவர் நலன், கற்றல் கற்பித்தல் பணிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவற்றை  ஆராய்வதற்கு பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் கல்வியாளர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.


தற்போது இந்த சிஜி தாமஸ் தலைமை குழு வரும் வார இறுதியில் தமிழக அரசிடம் அதன் பரிந்துரை முடிவுகளை அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


அதன்படி செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்வது, காலை மற்றும் பிற்பகல் என இருவேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்தும் அளிப்பதும் உள்ளிட்ட பரிந்துரைகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.