மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான உபாதைகள் வரலாம். . தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவும், மகிழ்ச்சியான செய்திகளும் கிடைக்கப்பெறுவீர்கள். விடாப்பிடியாக செயல் பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்
மிதுனம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வீர தீர செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
கடகம்
அனுபவ பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கடனை திருப்பிக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். நண்பர்களின் மூலம் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் அனைத்தும் இனிதே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். . உத்தியோகத்தில் மேலதி காரியின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
கன்னி
உங்களை யாரும் கண்டுகொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். நேர்மைக்கான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். ஆரோக்யத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்..
துலாம்
சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும் .பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திறமைகள் வெளிப்படும் நாள். உணவு விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.
விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.இழுபறியான செயல்கள் முடிவதற்கான சூழல் அமையும்.
தனுசு
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்று மதத்தவர் உதவி கிடைக்கும். எதிரிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். கனவு நனவாகும் நாள்.
மகரம்
எதிர்பார்த்தவைகளில் சில தள்ளி போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வேலை முயற்சிகள் வெற்றியடையும். வியாபாரத்தில் அதிரடிசலுகைகள் மூலம் லாபம் அடைவீர்கள். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுவது நன்மையை அளிக்கும்.உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உயர்வு பெறும் நாள்.
கும்பம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்
இதுவரை இருந்த கோபம் டென்ஷன் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை செய்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் கவனத்துடன் செயல்படவும்.
மோகனா செல்வராஜ்