கொரோனா பலி 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக (டெக்னிஷியனாக) வேலை பார்த்து வந்த கணேசன்  கடந்த 15-ம் தேதி திண்டுக்கல் சென்று வந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக இவருக்கு செய்யப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனையடுத்து இவரை கடந்த 18-ம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டார்.


 சிகிச்சை பெற்ற நிலையில், இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


____________________


சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6,607 பேர் கொரோனாவால் பாதிப்பு.


நாட்டில் கொரோனாவால் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்வு!
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,476 ஆக உயர்வு!


________________


மேற்குவங்கத்தில் கொரோனா பாதிப்பால் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் இன்று உயிரிழந்துள்ளார்.


60 வயதான அவரின் மறைவுக்கு முதல்வர் மம்தா பாணர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.


_____________________


கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க, சித்த மருத்துவர் சுப்பிரமணியன் கண்டுபிடித்த மருந்துக்கு காப்புரிமை வழங்குவது குறித்து முடிவு செய்ய, வரும் 26ம் தேதிக்குள் வல்லுநர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


சித்த மருத்துவ முறைப்படி 66 மூலிகைகளை கொண்டு மூலிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும், இந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்தி கொரானா தொற்றை குணப்படுத்தும் என்று சான்று வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் தெரிவித்தார்.


___________________