இன்றைய ராசிபலன் 09/06/2020


இன்றைய ராசிபலன்


மேஷம்: உணர்ச்சிபூர்வமாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம்.அலுவலகத்தில் மரியாதை கூடும்.


ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இதுவரை இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடு வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்து வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார்.  உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும்..


மிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். குல தெய்வ மற்றும் இஷ்ட தெய்வ பிரார்த்தனையை செய்வது நன்மை தரும். உத்தியோகத்தில்  உயரதிகாரி உங்களை புரிந்து கொள்ள மாட்டார். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


கடகம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிப்பு அதிகரிக்கும். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபா ரத்தில் வழக்கு சம்மந்தமாக நீங்கள் எதிர் பார்த்தபடி உங்களுக்கு வெற்றி கிடைக்கும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் உருவாகும். . புதன், ராகு இருவரின் அமைப்பு காரணமாக திடீர் அவசர, அவசிய பயணங்கள் இருக்கும். மாமனார் உடல் நலம் பாதிக்கப்படலாம், 


சிம்மம்: உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து  கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தால் பற்று வரவு உயரும். கர்ப்பமாக இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும். மாமன் வகை உறவுகளால் செலவுகள் வரும்.உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.


கன்னி: வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்ப வேண்டிய சூழ்நிலைகள் உள்ளது. தாயார் மூலம் மருத்துவ செலவுகள் வந்து போகும்.குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற் றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.


துலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். சனி, கேது, குரு மூவரின் சஞ்சாரம் காரணமாக வர வேண்டிய பெரிய தொகை கைக்கு வரும். மாமியார், மருமகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப் பீர்கள். உத்தியோகத்தில்  எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


விருச்சிகம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சி களில் கலந்து கொள்வீர் கள். சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். ஏழாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் இருவரின் சேர்க்கை இருப்பதால் மனஉளைச்சல், விரக்தி வந்து போகும். தந்தை உடல் நலம் பாதிக்கப்படலாம். சிறிய உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது நல்லது. . வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் தட்டி கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.


தனுசு: கடந்த இரண்டு நாட் களாக இருந்த மன உளைச்சல் நீங்கி அமைதி கிட்டும். குடும் பத்தில் நிம்மதி உண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். செவ்வாயின் பார்வை காரணமாக மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து பிரச்னைகள் பேச்சுவார்த்தை மூலம் நல்ல படியாக முடியும். வியாபாரம் சூடு பிடிக்கும்.


மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் மேற்பார்வையில் முடிப்பது நல்லது.குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். செவ்வாய் இரண்டில் இருப்பதால் பூர்வீக சொத்து சம்மந்தமாக ஒருமித்த கருத்து ஏற்படும்.. உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். வாகனம் தொந்தரவு தரும். சமையலறையில் கவனமாக வேலை செய்வது நலம் தரும்உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் பிரச்னை கள்வரக்கூடும். பிள்ளைகள் செயல்பாடுகள் காரணமாக வருத்தங்கள் வந்து போகும்.


மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சிலர் திடீரென்று அறிமுகமாகுபவர்களால் பயனடை வீர்கள். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. சிறிய உபாதைகளை உடனுக்குடன் பார்த்து விடுவது நல்லது.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


தொகுப்பு மோகனா செல்வராஜ்