விடைத்தாள் திருத்தும் பணிகள்
ஒத்திவைக்கப்பட்ட 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தமிழகத்தில் தொடங்க உள்ளன. 202 மையங்களில் மொத்தம் 38,108 ஆசிரியர்கள் ஜூன் 9ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் பணியில் ஈடுபடவுள்ளனர்.
தமிழகத்தில் 8 இடங்களில்... :
தமிழகத்தில் 8 இடங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. அதிகபட்சமாக கரூர், பரமத்தி, திருத்தணி, திருச்சியில் தலா 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழக அரசுக்கு கோரிக்கை :
சின்னத்திரை படப்பிடிப்புப் பணிகளில் கூடுதலான எண்ணிக்கையில் பணியாளர்களை அனுமதிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை திட்டம் :
தமிழகத்தில் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்படுவதால் பாடங்களை குறைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
17 புரிந்துணர்வு (Memorundum of Understanding) ஒப்பந்தங்கள் :
ரூ.15,000 கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (Memorundum of Understanding) தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.