தெரிந்து கொள்வோம்..!!
👉 மேற்கு வங்கத்தில் பசுக்களுக்கு புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் இருக்க வேண்டுமாம்.
👉 பழ வகைகளில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு.
👉 ஹம்மிங் பறவை மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் பறக்கும்.
👉 ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் 15 வாட்களை எடுத்துக்கொள்ளும்.
👉 இத்தாலியின் தலைநகரம் ரோம்.
👉 சர்தார் வல்லபாய் படேல் மைதானம் அகமதாபாத்தில் அமைந்துள்ளது.
👉 தென்னாப்பிரிக்காவுக்கு மூன்று தலைநகரங்கள் உண்டு.
👉 தியான் சந்த் விருது இந்தியாவில் விளையாட்டுகளில் வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும்.
👉 மனிதன் உபயோகித்த முதல் உலோகம் செம்பு.
👉 க்ரயோபைட்ஸ் என்பது பனிக்கட்டியின் மேல் வளரும் தாவரம்.
👉 நவம்பர் 16ஆம் தேதி உலக சகிப்புத்தன்மை நாளாக கொண்டாடப்படுகிறது.
👉 1939ஆம் ஆண்டு யூட்டாவில், ஒரு ஒற்றை மின்னல் 835 ஆடுகளை கொன்றது.
👉 அண்டார்டிகா, ஐரோப்பாவைவிட சுமார் 1.3 மடங்கு பெரியதாகும்.
👉 சராசரியாக ஒரு மனிதனின் நாக்கில் 2,000-8,000 சுவை மொட்டுகள் இருக்கும்.
👉 குறைந்த நேரம் தூங்கும் மிருகம் கழுதை.
👉 பக்ரா அணையை கட்டி முடிக்க 15 ஆண்டுகள் ஆயின.
👉 சிரிப்பூட்டும் வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடுவை கண்டுபிடித்தவர், ஜோசப் பிரீஸ்ட்லி.
👉 ஈபிள் கோபுரத்தை கட்டியவரின் பெயர் குஸ்ட்டேவ் ஈபிள்.