ராசிபலன்கள்   28/05/2020


ராசிபலன்கள்   28/05/2020


மேஷம்:


திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புதுவேலை கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சகஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். சில கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொதுச்சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமற்ற சூழல்  உண்டாகலாம். நிதானத்துடன் செயல்படவும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு


அஸ்வினி : விமர்சனங்கள் உண்டாகலாம்.


பரணி : கவனம் வேண்டும்.


கிருத்திகை : நிதானத்துடன் செயல்படவும்.


 


ரிஷபம்:


துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக   ருப்பார்கள். மனைவி வழியில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். தைரியம் கூடும் நாள். புதிய தொழில் சம்பந்தமான எண்ணங்களில் முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான சூழல் அமையும். இளைய உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் சுபிட்சம் ஏற்படும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.


ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.


   


 மிதுனம்:


கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.


திருவாதிரை :  உயர்வு உண்டாகும்.


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.


 


கடகம்:


ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். புதிய முடிவுகள் எடுக்கும் நாள். திட்டமிட்ட பணியில் சிறிது காலதாமத்திற்கு பின்பு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புதிய பொருட்களை  வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.


பூசம் : நிதானம் வேண்டும்.


ஆயில்யம் : எண்ணங்கள் ஈடேறும்.


 சிம்மம்:


கணவன்- மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அரசு காரியங்கள் இழு பறியாகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். பெருமையுடன் இருக்க வேண்டிய நாள் பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எண்ணிய ஆதரவு கிடைக்க காலதாமதமாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் வீண் அலைச்சல்கள் மற்றும் பதற்றம் உண்டாகலாம்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்


மகம் : ஆதரவு கிடைக்கும்.


பூரம் : தனவரவு உண்டாகும்.


உத்திரம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.


    கன்னி:


 எதிர்பார்ப்புகள் நிறை வேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும் வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். நல்லன நடக்கும் நாள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் காலதாமதம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுபச்செய்திகள் கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்


உத்திரம் : பயணங்கள் உண்டாகும்.


அஸ்தம் : தன்னம்பிக்கை உயரும்.


சித்திரை : காலதாமதம் உண்டாகும்.


    துலாம்:


கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் ஆதரவாக பேச தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அலுவலகத்தில் மரியாதை கூடும். மதிப்பு மரியாதை கூடும் நாள். தொழிலில் அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


சித்திரை : சுபமான நாள்.


சுவாதி : ஆதரவுகள் கிடைக்கும்.


விசாகம் : உதவிகள் சாதகமாகும்.


விருச்சிகம்:


குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள் குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மாற்றங்கள் நிறைந்த நாள். தம்பதிகளுக்கிடையே உறவுகள் மேம்படும். கண் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமான செய்தியை அளிக்கும்.


அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் :  1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


விசாகம் : கீர்த்தி உண்டாகும்.


அனுஷம் : சிந்தனைகள் மேம்படும்.


கேட்டை : சாதகமான நாள்.


 தனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அடுத்தவர்களை குறைக்கூறி கொண்டிருக்காமல் உங்களை மாற்றி கொள்ள பாருங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச் சுமை மிகுந்த நாள். தொழிலில் எதிர்பார்த்த வரவுகள் கிடைக்க காலதாமதமாகும். சக ஊழியர்களிடம் நிதானத்துடன் செயல்படுவதால் தேவையற்ற அவச்சொற்களை தவிர்க்கலாம்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை


மூலம் : வாதங்களை தவிர்க்கவும்.


பூராடம் : தனவரவுகள் தாமதமாகும்.


உத்திராடம் : நிதானத்துடன் செயல்படவும்.


 மகரம்:


 மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த வீட்டிற்கு தேவையான சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிட்டும். நன்மை கிட்டும் நாள் . தொழிலில் உள்ள மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களால் பொறுப்புகள் மற்றும் உயர்வு கிடைக்கும். கூட்டாளிகளால் தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் அமையும்.


அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : எதிர்ப்புகள் நீங்கும்.


அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.


கும்பம்:


குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றி கொள்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். மற்றவர்களிடம் உரையாடும் போது கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்குவதற்கான ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


அவிட்டம் : அமைதி வேண்டும்.


சதயம் : சுமூகமான நாள்.


பூரட்டாதி : கவனம் வேண்டும்.


மீனம்:


 மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள் நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வேலை விவகாரங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் மேன்மை உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


பூரட்டாதி : இலாபம் உண்யாகும்.


உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


ரேவதி : மேன்மை உண்டாகும்.



  • மோகனா செல்வராஜ்