இன்றைய ராசிபலன் (15-05-2020)



   வடிவமைப்பு திருமதி S.மோகனா செல்வராஜ்




மேஷம் (15-05-2020)

 பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.  மூத்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுநலத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


அஸ்வினி : முயற்சிகள் கைகூடும்.

பரணி : முன்னேற்றம் ஏற்படும். 

கிருத்திகை : கீர்த்தி உண்டாகும். 



                   +++++++++++++++++



 



ரிஷபம்

 அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். கணவன், மனைவிக்கிடையே உறவுநிலை மேம்படும். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


கிருத்திகை : அனுகூலமான நாள்.

ரோகிணி : புகழ் உண்டாகும்.

மிருகசீரிஷம் : உறவுகள் மேம்படும்.



 

                   ++++++++++++++++++

 




 



மிதுனம்

 உடல் தோற்றப்பொலிவில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கனவுகளை நிறைவேற்றுவதற்கான உதவிகள் கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்களுக்கு கீர்த்தியும், செல்வாக்கும் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்


மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும். 

திருவாதிரை : உதவிகள் கிடைக்கும். 

புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

 

                   ++++++++++++++++++



 



கடகம்

 செய்யும் பணிகளில் சற்று கவனமாக செயல்படவும். பணிகளில் ஏற்பட்ட மந்தத்தன்மையால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். மனதில் ஏற்பட்ட வீண் கவலைகளை களைவீர்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்களின் பிரச்சனைகளில் ஈடுபடுவதால் அவச்சொல் உண்டாகும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : கவலைகள் உண்டாகும்.

ஆயில்யம் : நிதானத்துடன் செயல்படவும்.



                    +++++++++++++++++



 



சிம்மம்

 பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத தனவரவரால் சேமிப்பு உயரும். விவாதங்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். 
சபைகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகளில் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும்.


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்


மகம் : புதிய நட்பு கிடைக்கும்.

பூரம் : சேமிப்பு உயரும்.

உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

 

                  ++++++++++++++++++





 



கன்னி

 தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிலும் அவசரப்படாமல் பொறுமையாக காரியங்களை செய்வீர்கள். பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு  நிறம்


உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.

அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.

சித்திரை :  அனுசரித்து செல்லவும்.



                 ++++++++++++++++++



 



துலாம்

 தந்தை பற்றிய கவலைகள் மேலோங்கும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். பயணங்களால் தனலாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் சுபவிரயம் செய்வீர்கள். பிள்ளைகளின் மூலம் சுபச்செய்திகள் வரும். 


அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்  நிறம்


சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.

சுவாதி : மேன்மையான நாள். 

விசாகம் : தனலாபம் உண்டாகும். 

              ++++++++++++++++++



 




விருச்சகம்

 

வீண் அலைச்சல்களால் உடல் சோர்வு உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். திரவிய பொருட்களின் மூலம் இலாபம் மேம்படும். எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : ஊதா  நிறம்


விசாகம் : சோர்வு உண்டாகும். 

அனுஷம் : சிந்தனைகள் மேம்படும். 

கேட்டை : இலாபம் உண்டாகும்.



 


                  ++++++++++++++++++++



 



தனுசு

 கூட்டாளிகளின் மூலம் நன்மை உண்டாகும். உயர்கல்வி தொடர்பான உதவிகள் சாதகமாகும். செய்யும் முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவு உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  நிறம்


மூலம் : நன்மை உண்டாகும்.

பூராடம் : வெற்றி கிடைக்கும்.

உத்திராடம் : சந்திப்பு உண்டாகும்.


                   ++++++++++++++++++++



 



மகரம்

 பயணங்களின் போது தேவையான ஆவணங்களை கொண்டு செல்லவும். மனதிற்கு நெருங்கியவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பங்காளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  நிறம்


உத்திராடம் : உடமைகளில் கவனம் வேண்டும்.

திருவோணம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.

அவிட்டம் : வாக்குவாதத்தை தவிர்க்கவும்.



                   ++++++++++++++++++



 



கும்பம்

 பூர்வீக சொத்துக்களால் விரயம் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் நுட்பத்திறமை வெளிப்படும். பொருளாதார மேம்பாட்டிற்கான சிந்தனைகள் அதிகரிக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்  நிறம்


அவிட்டம் : விரயம் உண்டாகும். 

சதயம் : திறமைகள் வெளிப்படும். 

பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


                  +++++++++++++++++++



 




 



மீனம்

 உறவினர்களின் ஆதரவால் சுபச்செய்திகள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பிறமொழி பேசும் மக்கள் சிலரால் நன்மைகள் உண்டாகும். ஜாமீன் கையெழுத்து போட்டு மற்றவர்களுக்கு கடன் வாங்கி தருவதை தவிர்க்கவும்.


அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்


பூரட்டாதி : சுபமான நாள். 

உத்திரட்டாதி : அனுபவம் உண்டாகும்.

ரேவதி : சிந்தித்து செயல்படவும்.


                                *சுபம்*



 


                 +++++++++++++++++++++