கொரோனா பாதிப்பு ...!தமிழக தலைமைச் செயலாளர் அறிவிப்பு...


தமிழகத்தில் மேலும் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு


* 77 பேரும் தனிமைபடுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள்


* தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 911 ஆக உயர்வு


3 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது


* கடந்த 24 மணி நேரத்தில் தீவிர சுவாச பிரச்சனை உள்ளவர்களை சோதித்ததில் யாருக்கும் கொரோனா இல்லை


90 சதவீத அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது


* ஏழை மக்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளது


* ஊரடங்கில் மக்கள் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - தலைமை செயலாளர்


ரேபிட் டெஸ்ட் கருவிகள் தமிழகத்திற்காக இந்தியா வந்தன


தமிழகத்தில் 9 பேர் பலி!


தமிழகத்தில் இன்று தூத்துக்குடியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழப்பு; தமிழகத்தில் பலி எண்ணிக்கை 9ஆக அதிகரித்தது!


தமிழகத்தில் இதுவரை 44 பேர் குணமடைந்துள்ளனர் - தலைமைச் செயலர் சண்முகம் தகவல்


ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமருடனான ஆலோசனைக்கு பின்பும் அமைச்சரவையின் ஆலோசனைக்கு பின்பும் முதல்வர் முடிவெடுப்பார்.


- தலைமைச் செயலாளர் சண்முகம்