கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள்
அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது
அரசும், மக்களும் சேர்ந்து கொரோனாவுக்கு எதிராக போராடி வருவதாக மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
ஆட்டோ ஓட்டுனர்கள் ரிக்ஷாக்காரர் போன்ற பல்வேறு நபர்கள் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்பதை இந்த இக்கட்டான சூழலில் தான் நாம் உணர்ந்து வருகிறோம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
இந்த இக்கட்டான சூழலில் பல பணக்கார நாடுகள் கூட தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தவித்தனர். இந்தியா தனது கலாச்சார முறைப்படி அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து உதவினோம்: பிரதமர் மோடி பெருமிதம்
துரதிர்ஷ்டவசமான விஷயம் என்னவென்றால் நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை நாம் கைவிடுவது தான். நமது சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை: பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேச்சு
பொது இடங்களில் எச்சில் துப்புவது மிகவும் மோசமான செயல். இதன் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் அந்த பழைய மோசமான பழக்கத்தை கைவிட வேண்டும்: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வேண்டுகோள்
கடந்த காலங்களில் காவல்துறையினர் குறித்து தவறான எண்ணங்கள் மட்டுமே நம் மனதில் இருந்து வந்தது ஆனால் இன்று அவர்களின் சேவை அளப்பரியதாக உள்ளது: பிரதமர் மோடி பேச்சு