சென்னை ஆர் கே நகரில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் .கொருக்குப்பேட்டை ஜெ ஜெ நகரை சேர்ந்தவர் கு.பாபு (25)ஆட்டோ ஓட்டுநர் பாபு கடந்த 9ஆம் தேதி கொருக்குப்பேட்டை கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் ஆட்டோவில் சென்ற பாபு போலீசார் நிறுத்தும்படி கூறியும் மீறி சென்றாராம். போலீசார் ஆட்டோவை மடக்கி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது இதில் இரு கைகளிலும் காயம் ஏற்பட்டதாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் .அதேவேளை ஊரடங்கை மீறியதாக. தொற்று பரவால் சட்டம் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்..பாபு
தாக்கப்பட்டது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். ஆர்கே நகர் காவல்நிலைய முதல்நிலைக் காவலர் வீ. மணிகண்டனை (36) பணியிடை நீக்கம் செய்து பெருநகர் வடக்கு மண்டல இணை ஆணையர் கபில்குமார் சி.சரத்கர் உத்தரவிட்டார்.