நம் வாழ்க்கையும் நதி மாதிரி தான்-மாஸ்டர்' விழாவில் விஜய் பேச்சு


'மாஸ்டர்'படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதற்கு பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் என யாருக்குமே அழைப்பு விடுக்கப்படவில்லை. 'மாஸ்டர்' படக்குழுவினர் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். 



“'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தம் எனக்கும் உள்ளது. அதுக்கு முக்கியமான காரணம், போன விழாவில் அரங்கிற்கு வெளியே நடந்த விஷயங்கள் தான். இந்த விழாவுக்கே அரைமனதுடன் தான் ஒப்புக் கொண்டேன்.




இந்த விழாவின் நாயகன் அனிருத் தான். அனைத்து பாடல்கள் உருவாக்கத்துக்குப் பின்னாலும் ஒரு குட்டிஸ்டோரி இருக்கும். ஆனால், இதில் குட்டி ஸ்டோரியை பாடலாக உருவாக்கியுள்ளார். அனிருத்தும், அருண்ராஜா காமராஜும் சேர்ந்து என்னைச் செய்துவிட்டார்கள். படத்துக்குப் படம் ரொம்ப ஷார்ப்பாகிக் கொண்டே இருக்கிறார். வாழ்த்துகள் ராக் ஸ்டார்.


ஒரு நடிகனாக ஜெயித்தவுடன், அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வது ரொம்பவே கஷ்டமான விஷயம். சின்ன சின்ன கேரக்டர்கள் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார்  . இந்தப் படத்தில் நல்ல வில்லன் கேரக்டர். எனக்கு எதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று விஜய் சேதுபதி அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ஏனென்றால், அவருக்கென்று தனி வியாபாரம் இருக்கிறது. அதில் படங்கள் நடித்துப் போய்க் கொண்டே இருக்கலாம். ஒரு நாள் அவரிடமே 'ஏன்.. எதற்கு' என்று கேட்டேன். 'எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ங்க' என்று நாலு வார்த்தை சொல்லிவிட்டுப் போய்விட்டார். ரொம்ப நன்றி நண்பா.