அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஶ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயில்


12.03.2020 வடசென்னை, சென்னை இராயபுரம் குமாரசாமி தெருவில் அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஶ்ரீ வீரபத்ர சுவாமி திருக்கோயிலில் நூதன ராஜகோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.மங்கள நாதஸ்வர வாத்தியங்களுடன் யாகசாலை பூஜையுடனும் யாக வேள்விகள் வளர்கப்பட்டு கலசங்களுக்கு புனிதநீரால் கும்பாபிஸேகம் நடத்தப்பட்டது.கும்பாபிஸேக புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பத்திரகாளியம்மன் தரிசனம் செய்து அருள் பெற்றனர்.இவ்விழாவில் செயல் அலுவலர் பாண்டியராஜன்,பரம்பரை அரங்காவலர் ஆர்.வீரமணி நாடார்,திருப்பணி குழுவினர்கள் டீ.லட்சுமணன்,பி.சுதர்சன் காமராஜ்,மோகன் மற்றும் கோயில் நிர்வாகிகள்,உறுப்பினர்களக,பக்தகோடிகள் அனைவரும் கும்பாபிஷேக விழா கலந்துகொண்டனர்.இவ்விழாவில் வருகைதந்த பக்தர்கள் 2500பேருக்கு அன்தானமும் வழங்கப்பட்டது. இக் கோயில் ராஜ கோபுரம் கட்டுவதற்கு பொது மக்கள் தங்களால் இயன்ற பணம் நன்கொடையாக பெறப்பட்டு ராஜகோபுரம் சிறப்பாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது