செய்தித் துளிகள்

  • நிர்பயா வழக்கு: சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி ,குற்றவாளிகள் வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில் மனு தள்ளுபடி; அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு


  • சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் விசாரணை அறைக்கு வருவதை தவிர்க்கவும்


    -கொரோனா எதிரொலியாக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரிக்கும் அறையில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது


    மார்ச் 31வரை ‘தள்ளுபடிக்காக’ என்ற தலைப்பில் எந்தவழக்கும் பட்டியலிடப்படாது எனவும் அறிவிப்பு



  • கொரோனா - ஒடிசாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு கடும் கட்டுப்பாடு

  • மத்திய பிரதேசத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - கமல்நாத் அரசுக்கு ஆளுநர் உத்தரவு


  • டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் உடனே வழங்க வேண்டும்


    டாஸ்மாக் மதுக்கடைகள், மதுக்கூடங்களில் கை சுத்திகரிப்பான் வைக்கவும், அங்கு வரும் நுகர்வோர் அதை பயன்படுத்தவும் உத்தரவு


    - தமிழக அரசு சுற்றறிக்கை




  • கொடைக்கான‌ல் எதிர்வ‌ரும் மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் கொடைக்கான‌ல் வ‌ர‌ க‌ட்டுப்பாடுக‌ள்:


    கொரோனா பாதிக்க‌ப்ப‌ட்ட‌ 14  நாடுக‌ளில் இருந்து வ‌ரும் வெளிநாட்டு ப‌ய‌ணிக‌ள் கொடைக்கான‌ல் வ‌ர‌ த‌டை.



  • நாளையிலிருந்து 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் திரையரங்குகளில், விளையாட்டு அரங்குகள், பார்கள் கேளிக்கை விடுதிகள்  மூட வேண்டும் என முதல்வர் உத்தரவு