செய்தித் துளிகள்

புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் செலுத்தும் முறையே தொடர வேண்டும்: உள்துறை அமைச்சகம்


புதுச்சேரியில் இலவச அரிசிக்கு பதில் பணம் செலுத்தும் முறையே தொடர வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் கிரண்பேடி தகவல் அளித்துள்ளார். பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தும் முறையே தொடர வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 


சென்னையில் ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சம் பணத்துடன் மாயமான ஓட்டுனர் கைது


மன்னார்குடி: சென்னையில் ஏ.டி.எம்.மில் நிரப்ப வந்தபோது ரூ.52 லட்சம் பணத்துடன் மாயமான ஓட்டுனர் அம்புரோஸ் மன்னார்குடி அருகே கைது செய்யப்பட்டார். மன்னார்குடி அருகே பதுங்கி இருந்தவரை அதிகாலை கைது செய்த போலீஸ் ஓட்டுனர் அம்புரோஸை சென்னை அழைத்து வருகிறது.


 


பெரும்பான்மை சிங்கள மக்களின் சம்மதமின்றி தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்க முடியாது : இலங்கை அதிபர் கோத்தபய அறிவிப்பு